ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !
ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !
பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார்.
சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது.
தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார்.
அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகள...







