சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ டீசர் வெளியானது!
பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!
தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர...
