மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி — விமர்சனம்
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி -- திரைப்பட விமர்சனம்
நட்சத்திரங்கள் :அனுஷ்கா ஷெட்டி, நவீன் பொலிஷெட்டி, துளசி, முரளி சர்மா
இசை :ரதன்
ஒளிப்பதிவு :நீரவ்ஷா
இயக்கம் :மகேஷ் பாபு
லண்டனில் உள்ள பெரிய ஹோட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராகப் பணியாற்றும் அனுஷ்கா தன் தாய் ஜெயசுதாவுடன் வசிக்கிறார்.
மகளுக்கு திருமணம் செய்து வைக்க தாயார் நினைக்கும் போதெல்லாம் அனுஷ்கா அதை தவிர்க்கிறார்.
இருவரும் இந்தியா வருகின்றனர்.
ஜெயசுதா திடீரென இறந்த விட திருமண வாழ்க்கையை விரும்பாத அனுஷ்கா குழந்தை பெற்று வளர்க்க ஆசைப்படுகிறார்.
தானும் தன் தாயும் வசித்ததை போல் தன் குழந்தையுடன் மட்டும் வசிக்க வேண்டும் என்பது அனுஷ்காவின் எண்ணம்.
தோழியின் உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்று தன் விருப்பத்தை சொல்கிறார்.
அங்குள்ள டாக்டர் காட்டும் விந்தனு தானம் செய்பவர்கள் யாரையும் அனுஷ்காவுக்கு ...
