![]()

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி — திரைப்பட விமர்சனம்
நட்சத்திரங்கள் :அனுஷ்கா ஷெட்டி, நவீன் பொலிஷெட்டி, துளசி, முரளி சர்மா
இசை :ரதன்
ஒளிப்பதிவு :நீரவ்ஷா
இயக்கம் :மகேஷ் பாபு
லண்டனில் உள்ள பெரிய ஹோட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராகப் பணியாற்றும் அனுஷ்கா தன் தாய் ஜெயசுதாவுடன் வசிக்கிறார்.
மகளுக்கு திருமணம் செய்து வைக்க தாயார் நினைக்கும் போதெல்லாம் அனுஷ்கா அதை தவிர்க்கிறார்.
இருவரும் இந்தியா வருகின்றனர்.
ஜெயசுதா திடீரென இறந்த விட திருமண வாழ்க்கையை விரும்பாத அனுஷ்கா குழந்தை பெற்று வளர்க்க ஆசைப்படுகிறார்.
தானும் தன் தாயும் வசித்ததை போல் தன் குழந்தையுடன் மட்டும் வசிக்க வேண்டும் என்பது அனுஷ்காவின் எண்ணம்.
தோழியின் உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்று தன் விருப்பத்தை சொல்கிறார்.
அங்குள்ள டாக்டர் காட்டும் விந்தனு தானம் செய்பவர்கள் யாரையும் அனுஷ்காவுக்கு பிடிக்கவில்லை.
ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் நவீனை பார்த்த அனுஷ்கா அவரையே விந்தணு தானம் செய்ய தேர்வு செய்கிறார்.
பழகும்போது அனுஷ்காவை காதலிக்கும் நவீன், அவர் எதிர்பார்ப்பை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.
விந்தணு தானம் செய்ய ஆரம்பத்தில் நவீன் மறுத்தாலும் பின்னர் சம்மதிக்கிறார்.
அனுஷ்காவுக்கு குழந்தை பிறந்ததா? நவீனை அவர் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டாரா என்பது தான் படத்தின் இறுதிப் பகுதி.
விந்து தானத்தை வைத்து உருவான ‘விக்கி டோனர்’ இந்திப் படம் ‘தாராள பிரபு’ என்ற பெயரில் தமிழிலும் வந்தது.
ஆனாலும் இந்தப் படம் சற்று வேறு விதமான கதை அம்சத்துடன் அருமையான திரைக்கதை காரணமாக சற்றும் தொய்வில்லாமல் பிரமாதமாக செல்கிறது.
அனுஷ்கா நவீன் இருவரும் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கொஞ்சம் தவறினால் முகம் சுளிக்கச் செய்யும் காட்சிகளை கத்தி மேல் நடப்பது போல் அழகாக கையாண்டு ரசிக்க வைக்கிறார் வைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.
ஒளிப்பதிவு நீரவ்ஷா என்றால் கேட்கவும் வேண்டுமா? கண்களைக் கவர்ந்து மனதை குளுமையாக்குகிறது ஒளிப்பதிவு.
படத்தில் இழையோடும் மெலிதான நகைச்சுவையை நன்கு ரசிக்கலாம்.
மொத்தத்தில் பீல் குட் மூவி.
மதிப்பெண் 3.5/5
