துபாயில் டிரிபிள் எம் நிறுவனம் சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்கம்!
அமீரகத்தில் இருக்கும் திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் முக்கிய முன்னெடுப்பு!
துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் டிரிபிள் எம் நிறுவனம், அதன் நிறுவனரும் தொழிலதிபருமான பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய முன்னெடுப்பை செயல்படுத்தி உள்ளது. அமீரகத்தில் வசிக்கும் இந்திய மற்றும் இதர திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் நோக்கில் மூவி மேக்கர்ஸ் கிளப்பை டிரிபிள் எம் தொடங்கியுள்ளது.
துபாயில் நடைபெற்ற மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சிற்பி, நடிகர் பகவதி பெருமாள், நடிகை சௌம்யா மேனன், நடிகர் அப்தல்லா அல் ஜஃபாலி, தொழிலதிபர்கள் வெங்கட், கணேஷ் ஹரி நாராயணன், அனந்த்,திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர் நிகில் முருகன், டிரிபிள் எம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மஞ்சுளா ராமகி...
