வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிப்ரியன்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஹை ஃபை படத்துக்கு இசையமைத்திருக்கும் ஆர்.எஸ்.ரவிப்ரியன் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த இசையமைப்பாளர்.
இசையும் கவியும் என்ற யூட்யூப் சேனலில் சுமார் 130 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பதிவேற்றம் செய்திருக்கிறரா். இப்பாடல்கள் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் இசையமைப்பாளர் .ஆர்.எஸ்.ரவிப்பிரியனை சந்தித்து பேசியதிலிருந்து சில பகுதிகள்....
"என் தாத்தா பாலகிருஷ்ணன் ஓர் இசைக்கலைஞர். குடும்பமே இசைப் பின்னணியில் இருந்ததால் சிறு வயதிலேயே எனக்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நான் தேவாரம் பாடல்களைப் பாடுவேன். தொடர்ந்து நானே பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்தேன்.
நான் இசையமைத்த "ஓ வண்ண வெண்ணிலவே..." என்ற பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. கனடா நாட்டில...
