திங்க் இண்டீயின் ‘பவழ மல்லி’ பாடல் வெளியீடு!
திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது.
வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “எனக்கு இந்த தளத்தை வழங்கிய சந்தோஷ் அண்ணா மற்றும் மகேஷ் அண்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எனது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, என்மீது தொடர்ச்சியாக அன்பு மற்றும் ஊக்கத்தை பொழிந்து...
