Friday, August 28

Tag: nagarjuna

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’!

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’!

News
நாகார்ஜுனா இன்டர்போல் அதிகாரியாக நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ’இரட்சன் - தி கோஸ்ட்’ அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. 'பிஎஸ்வி கருடவேகா', 'சந்தாமாமா கதலு’ உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் பிரவீன் சத்தாரு இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் நார்த்ஸ்டார் எண்டர்டெய்மெண்ட் பேனர்ஸ் இணைந்து, பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ’இரட்சன் - தி கோஸ்ட்’. தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களின் தயாரிப்பும், வெளியீடும் தற்போது மாறியுள்ளது. நடிகர் நாகார்ஜுனா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்படங்களை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தோழா’ திரைப்படத்துக்குப் பிறகு நாகார்ஜுனா மீண்டும...