‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடல் வெளியீடு!
காஜல் அகர்வால் இடம்பெறும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பாடல் !
ZEE Studios வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல், படத்தின் உணர்ச்சி மையமாக அமைந்துள்ளது. பாடகி ரிச்சா ஷர்மா மனதை வருடும் வகையில் பாடியுள்ள இந்த பாடலுக்கு மங்கேஷ் தகாடே இசையமைத்துள்ளார். வரிகளை ஷகீல் அசாமி எழுதியுள்ளார்.
காஜல் அகர்வால் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘து சல்’, மிகப்பெரிய சவால்களையும், உணர்வுபூர்வமான போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் ஒருபோதும் சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியான பயணத்தை பிரதிபலிக்கிறது. சக்திவாய்ந்த காட்சிகளும், ஆழமான வரிகளும் இணைந்து, ஒவ்வொரு தோல்விக்குப்...
