நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றிய புத்தம் புதிய திரைப்படங்கள் உரிமை!
புதிய ஆண்டு, புதிய திரைப்படங்கள்! 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தமிழ் திரைப்படங்கள் பட்டியலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!
மும்பை, ஜனவரி 15, 2026: தனது கதை சொல்லல் தரத்தை பிரம்மாண்டமாக தமிழ் சினிமா தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழலில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் தனது வரவிருக்கும் தமிழ் திரைப்படங்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், திறமையான இயக்குநர்கள் மற்றும் மொழிகள் தாண்டி பார்வையாளர்களை சென்றடையும் கதைகள் என பல தரமான படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ரசிகர்களை கவர்ந்த மாஸ் என்டர்டெய்னர்கள் முதல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்கள் வரை 2025 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு மறக்க முடியா...

