Thursday, October 15

Tag: nethaji prabu

இம்மாதம்  24-ல் வெளியாகிறது  ‘ஒளடதம்’

இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’

News
  புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து 'ஒளடதம்' படத்தின் தயாரிப்பாளர்  கண்ணீருடன் தன் அனுபவத்தை ஊடகங்களில் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் அது திரையுலகில் பரபரப்பானது. கடந்த சில மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த 'ஒளடதம்' திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்று வெற்றிகரமாக மே 24ல் வெளியாகிறது.   ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'ஒளடதம்'. நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது. பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என...