“தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை” – நடிகை ரியா
ஒரு ஹாரர் படமாக உருவாகி இருக்கிறது 'மேகி' என்கிற மரகதவல்லி . இப்படத்தில் கதாநாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா .அவர் ' மேகி' படத்தின் அனுபவங்களைக் கூறுகிறார்.
" எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன் . சிறு வயதிலேயே மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு .ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன் .அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று "நீ ஒரு டிகிரி முடித்து விட்டு வா. அப்புறம் பார்க்கலாம்" என்றார் .அதன்படி நான் பி.எஸ்.சி முடித்து மீண்டும் இதைக் கேட்ட போது "இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா "என்றார் .ஆனால் நான் விடவில்லை. "படித்துக்கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை" என்று கூறினேன்.
நான் சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன் .ஒருபக்கம் படித்...
