‘மாறா’ படத்தில் இடம் பெறும் ‘ஓ அழகே’ பாடல் எல்லா வயதினருக்கும் பிடிக்கும்!
மாறா படத்திலிருந்து ஓ அழகே பாடலோடு மாதவனோட பயணம் மேற்கொள்ளுங்கள்: தாமரையின் துள்ளலான வரிகளுக்கு, பென்னி தயாலின் மயக்கும் குரலில் ஜிப்ரானின் இசையில்!
திலீப் குமார் இயக்கியிருக்கும் மாறா திரைப்படத்தை ப்ரமோத் ஃபிலிம்ஸ் சார்பாக ப்ரதீக் சக்ரவர்த்தியும், ஷ்ருதி நல்லப்பாவும் தயாரித்துள்ளனர். மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், மாறா திரைப்படத்தை, தமிழில், ஜனவரி 8 2021 முதல் அமேசான் ப்ரைமில் பிரத்யேகமாகக் கண்டு களிக்கலாம்.
ஒரு அறை உனது பாடலுடன் ரசிகர்களை மயங்கவைத்த பிறகு, வெளியீடுக்குத் தயாராக இருக்கும் மாறா திரைப்படத்திலிருந்து இன்னொரு மெல்லிய பாடலின் காணொலி முன்னோட்டத்தை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.
ஓ அழகே என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு இசை ஜிப்ரான், வரிகள் எழுதியது தாமரை, பெ...
