
‘ஓ மை டாக்’ படத்தை அவசியம் பார்க்க 5 காரணங்கள்!
அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!
அமேசான் ஒரிஜினல்ஸின் 'ஓ மை டாக்'- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்' என குறிப்பிட்டு, 'ஓ மை டாக்' படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.
'ஓ மை டாக்' திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம்.
1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..!
'ஓ மை டாக்' - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக ...