ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ _ விமர்சனம்
பல ஆண்டுகளாக பத்திரிகை துறையில் அனுபவம் பெற்ற கேப்டன் எம் பி ஆனந்த் ஃப்ரைடே பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ்.
ராணுவ குடியிருப்புக்கு அருகில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அங்குள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்கும் என்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தான்.
தமிழகத்தையே பதைபதைவைக்க வைத்த இந்த சம்பவம் செய்திகளில் பரபரப்பானது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவத்தில் போலீசார் கைப்பற்றினர்.
கூவம் ஆற்றில் வீசப்பட்ட துப்பாக்கி வளைகரம் ஒன்றில் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாகியிருப்பதுதான் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'.
நான்கு கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி மிகவும் விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு அருமையாக படமாக்கப்பட்டு இருக்கிறது.
முதல் கதையில் சுகாதாரப் பணியாளரான அபிராமி தன் மகனை ...
