
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்!
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்!
சென்னை, ஏப்ரல் 26, 2022:
இந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது பயணத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் என் எஃப் டி (NFT) திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவிஸ், மிகக் குறுகிய காலத்தில் திரைத்துறையையும் தாண்டி கவனத்தை ஈர்த்து வருகிறது.
திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை நிறுவியுள்ளனர்.
என் எஃப் டி (NFT), அதாவாது நான் ஃபங்கபிள் டோக்கன் (non-fungible token) என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற சொத்துகளை ஆன்லைனில் வா...