ஒரு நொடி’ விமர்சனம்
‘ஒரு நொடி’ விமர்சனம்
மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒரு நொடி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 26 – வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் வழங்குகிறார்.
தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்ய, சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு நிகழ்வு, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எப்படி புரட்டிப்போட்டு விடுகிறது என்பதை திகிலும், த்ரில்லுமாக அளித்து உள்ளனர்.
மதுரை அருகே, போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார் எம்.எஸ். பாஸ்கர். தனது மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கி, திரும்ப அடைக்க முடியாமல் திண்டாடுகிறார். ஒரு வழியாக பணத்தை புரட்டி திருப்பித் தரவிருக்கும் ...
