Friday, October 23

Tag: othaserupu seize 7

புதிய உயரங்களில் சிறகு விரிக்கும் பார்த்திபன்!

புதிய உயரங்களில் சிறகு விரிக்கும் பார்த்திபன்!

News
வித்தகமும் வர்த்தகமும் ஒருங்கிணைந்த அரியதோர் படைப்பு என்று பார்த்திபனின் படங்களைச் சொல்லலாம். வியாபார ரீதியிலான வெற்றி என்ற வணிகச்சூழலில் சொகுசாகப் பயணித்துக்கொண்டிருந்த படவுலகை, தான் அமைத்த புதிய பாதையில் செலுத்தி வெற்றி பெற்றவர் பார்த்திபன். தானே கதாநாயகனாக நடித்து தன்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் படத்திலேயே மத்திய அரசின் தேசிய விருதில் ஆரம்பித்து அத்தனை அங்கீகாரங்களையும் பெற்றவர்களைப் பட்டியலிட்டால், அதில் முதலிடத்தில் இருப்பவர் பார்த்திபன். எதையும் வித்தியாசமாக சிந்தித்து முதலிடத்தை பிடிக்க முயலும் அவரது சாதனை முயற்சிகள் இப்போது சர்வதேச அளவில் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. பார்த்திபன் நடித்து இயக்கித் தயாரித்திருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது....