பானி-பூரி வெப் சீரிஸ் விமர்சனம்
பானி-பூரி வெப் சீரிஸ் விமர்சனம்
Living together என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து காணச் சகிக்காத காட்சிகளுடனும், கேட்கச் சகிக்காத வசனங்களுடனும் வரும் ஓடிடி சீரிஸ்கள் மத்தியில் பொறுப்புணர்வுடன் பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியிருக்கும் சீரிஸ்
பானி பூரி. இதற்காகவே அவரை முதலில் பாராட்டி விடலாம்.
நவீன காலத்தின் காதல் கதை யை, கதாநாயகன் 'லிங்கா' கதாநாயகி 'சம்பிகா' இவர்களை வைத்து மிகவும் அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இவர்கள் இருவரது ஈகோ மோதல்களும் அருமை.
காதலர்களான நாயகன் நாயகி இருவரும் தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். ஒரு வாரம் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து ஒருவரை ஒருவர். புரிந்து கொள்ள முயல்கிறார்கள். இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் கல்யாணத்தில் முடிகிறதா என்பதுதான் கதை.
நாயகி சம்பிகாவின் தந்தையாக இளங்கோ குமாரவேல், நாயகன் லிங்காவின் நண்பனாக வினோத்...
