![]()

பானி-பூரி வெப் சீரிஸ் விமர்சனம்
Living together என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து காணச் சகிக்காத காட்சிகளுடனும், கேட்கச் சகிக்காத வசனங்களுடனும் வரும் ஓடிடி சீரிஸ்கள் மத்தியில் பொறுப்புணர்வுடன் பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியிருக்கும் சீரிஸ்
பானி பூரி. இதற்காகவே அவரை முதலில் பாராட்டி விடலாம்.
நவீன காலத்தின் காதல் கதை யை, கதாநாயகன் ‘லிங்கா’ கதாநாயகி ‘சம்பிகா’ இவர்களை வைத்து மிகவும் அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இவர்கள் இருவரது ஈகோ மோதல்களும் அருமை.
காதலர்களான நாயகன் நாயகி இருவரும் தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். ஒரு வாரம் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து ஒருவரை ஒருவர். புரிந்து கொள்ள முயல்கிறார்கள். இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் கல்யாணத்தில் முடிகிறதா என்பதுதான் கதை.
நாயகி சம்பிகாவின் தந்தையாக இளங்கோ குமாரவேல், நாயகன் லிங்காவின் நண்பனாக வினோத் சாகர் இருவரும் கவனம் ஈர்க்கும் வகையிலான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
சீரிஸ் முழுவதும் காமெடிக்கு பஞ்சம் இல்லை, இந்த சீரிஸ் குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டது என்று படக் குழுவினர் கூறியுள்ளனர் ஆனால் பார்க்கும்போது அப்படி தெரியவில்லை , படத்தின் ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியை மிகவும் எளிமையான புதிய உத்தியில் சொல்லியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
சீரிஸில் வரும் இரண்டு முக்கியமான பெண் பாத்திரங்களில் ஒன்றின் முகம் காட்டப்படாததும், மற்றொரு பாத்திரம் திரையில் தோன்றினாலும் வசனம் எதுவும் இல்லாததும், ஒரு மெசேஜ் சொல்வதற்காக இரு கேரக்டர்களையும் வைத்திருப்பது ரசிக்கத்தக்க அம்சம்தான்.
PK வின் எடிட்டிங் கச்சிதமாக அமைந்திருக்கிறது.
மியூசிக் டைரக்டர் நவநீர் சுந்தர் தன் ஐபேடிலேயே முழு படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இதை ஒரு சாதனை என்றே சொல்லலாம்.
குடும்பத்துடன் சேர்ந்து எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் பார்க்கக்கூடிய தரமான வெப் சீரிஸ் பாணி-பூரி
Rating : 3.5
