Wednesday, November 18

Tag: PADAVETTU MOVIE REVIEW

படவேட்டு (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

படவேட்டு (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

Reviews
பொதுவாக மற்ற மொழிகளில் பார்க்க முடியாத கதைக்களம், பாத்திரப் படைப்பு, ஆகியவற்றை மலையாள மொழிப் படங்களில் தாராளமாகப் பார்க்கலாம் என்பதை 'படவேட்டு' மலையாளப் படம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. வேலை வெட்டி எதவுமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் நிவின் பாலி. தடகள விளையாட்டு வீரரான நிவின் பாலி விபத்து ஒன்றி்ல் சிக்கி, உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்ட பிறகுதான் இவ்வாறு முடங்கிப்போய் வீட்டிலேயே இருக்கிறார். கோழி மாடு போன்றவற்றை ஜீவாதாரத்துக்காக வளர்த்து வருகிறார் நிவின் பாலியின் அத்தை. வீட்டில் இவர்களைத் தவிர வேறு யாருமில்லை. மாடுகள் தரும் பாலைக் கொண்டுபோய் பால் சொசைட்டியில் தருவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை நிவின் பாலி. இந்த சூழலில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தன் சொந்த லாபத்துக்காக மழைக்கு ஒழுகும் நிவின் பாலியின் பழைய வீட்டை புதுப்பித்துக் கொடுக்க முன் வருகிற...