விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கேள்வி
விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு
திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் 'ரோகினி' ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரிடம் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது . அப்போது பேசும்போது,
"கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது. இதன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார்கள்.&...
