கமாண்டோ படை வீரர்களிடம் சிக்கிக்கொண்ட கதாநாயகன்,,,
நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலக்ப்போரின் கடைசி குண்டு "படத்தின் படப்பிடிப்பு சென்னை,மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள்.
நீலம் புரொடக்சன் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம் , மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தன்ர்.
நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர் குழுவினர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த நேரத...


