
பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்
பயணிகள் கவனிக்கவும் - விமர்சனம்
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுவதும், அதன் உண்மைத் தன்மையைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் பலர் பகிர்வதும் எவ்வளவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கும் மிகச் சரியான உதாரணம் பயணிகள் கவனிக்கவும்.
பேசும் திறன் குறைந்த மாற்றுத் திறனாளியான விதார்த், உடல் நலமின்றி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் மகளை இரவு முழுக்க உறக்கமின்றி கவனித்துக் கொள்கிறார். இந்த அசதியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கையில் அசந்து தூங்கி விடுகிறார். இதை கருணாகரன் வீடியோ எடுத்து, குடிபோதையில் பயணி ஒருவர் தூங்குவதாக சமூக வலைதளத்தில் பதிவிட, அதை பலரும் பகிர்கின்றனர். விளைவு தொலைக்காட்சியில் செய்தியாக வரும் அளவுக்கு இந்தப் பதிவு பரபரப்பாகிறது.
இதன் காரணமாக விதார்த் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் ஏற்படுவதில் துவங்கி, அவரது மகன் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாக ...