காதலை மய்யமாக வைத்து உருவான ‘பழகிய நாட்கள்’!
பழகிய நாட்கள்- ஒரு காதலர் தின அன்பளிப்பு!
எழுதி இயக்கியுள்ளவர் -ராம்தேவ்
காதலை மய்யமாக வைத்து தமிழில் இதுநாள் வரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன !
ஆனால் இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நோக்குகிறது !
காதலிப்பது என்பது இரு வகைப்படும்
ஒன்று -இளவயது காதல்
இரண்டாம் வகை -முதிர்ந்த காதல்!
இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குனர் ராம்தேவ் யதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாக திரைக்கதையில் அமர்த்தி, சுவைபட, துளி கூட விரசமின்றி ஒரு காதலர் தின பரிசாக இக்காதல் கதையை வழங்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை!
மீரான் மற்றும் மேகனா-புதுமுக அறிமுகங்கள் இப்படத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்துள்ளனர்!
மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி , வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா ஆ...
