பேச்சி _ திரை விமர்சனம்
பேச்சி _ திரை விமர்சனம்
அடர்ந்த மலை வனத்தில், பேச்சி என்கிற கொடூர சக்தியிடம் சிக்கும் ஐந்து பேரின் கதைதான் பேச்சி.
டிரெக்கிங் செய்வதில் ஆர்வம் உள்ள ஐந்து பேர், நெடிதுயர்ந்து நிற்கும் மலை ஒன்றில் டிரெக்கிங் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக வருகிறார் வனத்துறை கடை நிலை ஊழியர்.
இந்த ஊழியர், காட்டுப் பகுதியில் உள்ள சில இடங்கள் ஆபத்தானவை என்றும் அங்கே செல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த நண்பர்கள் குழு அதைக் கேட்காமல், 'பேச்சி' என்கிறஅமானுஸ்ய சக்தி உள்ள பகுதிக்குள் சென்றுவிடுகிறார்கள். மரத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருக்கும் பேச்சி, மீண்டும் சக்தி பெற்றி வெளியே வருகிறது.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை திகிலாச் சொல்லி இருக்கிறார்கள்.
வனத்துறை கடை நிலை ஊழியராக வருகிறார் பால சரவணன். எப்போதுமே இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர். இதிலும் அதே போல ரசிக்கவைக்கிறார். மலையேற ...
