Friday, September 25

Tag: pei irukka bayam en

பேய் இருக்க பயமேன் – விமர்சனம்

பேய் இருக்க பயமேன் – விமர்சனம்

Reviews
இன்னொரு பேய் படமா என்ற எண்ணம் படத்தை பார்க்கும் முன் இருந்தாலும், பேய் தொடர்பாக ஒரு புதிய செய்தியை சொல்லியிருக்கும் படம் பேய் இருக்க பயமேன். அதற்காகவே படக்குழுவைப் பாராட்டலாம். இதற்கு முன் வந்த படங்களில் பேய்கள் பார்வையாளர்களை பயமுறுத்தவே செய்யும். பின்னர் பேய்கள் நகைச்சுவைக்கு பயன்படுத்தப் பட்டன. இரண்டும் இன்றி ரசிகர்களை சோதித்த பேய்களும் உண்டு. ஆனால் இதுவரை வந்த எந்தப் படத்திலும் இல்லாத வகையில் பேயைப் பார்த்து பயப்படக்கூடாது என்பதுடன் பேயுடன் நட்பு பாராட்டினால் அது நமக்கு கட்டுப்படும் என்று பேய் இருக்க பயமேன் சொல்லியிருக்கிறரார்கள். புதுமணத் தம்பதி தனிக் குடித்தனம் நடத்த ஒரு பங்களாவுக்கு வருகிறார்கள். அந்த வீட்டில் ஜோடியாக இரண்டு பேய்கள் இருக்கின்றன. மனதளவில் ஒத்துப்போகாமல் இருக்கும் ரியல் ஜோடியை பேய் ஜோடி இணைத்து வைக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன்தான் படத்தி...