பேய் இருக்க பயமேன் – விமர்சனம்

0

 615 total views,  1 views today

இன்னொரு பேய் படமா என்ற எண்ணம் படத்தை பார்க்கும் முன் இருந்தாலும், பேய் தொடர்பாக ஒரு புதிய செய்தியை சொல்லியிருக்கும் படம் பேய் இருக்க பயமேன். அதற்காகவே படக்குழுவைப் பாராட்டலாம்.

இதற்கு முன் வந்த படங்களில் பேய்கள் பார்வையாளர்களை பயமுறுத்தவே செய்யும். பின்னர் பேய்கள் நகைச்சுவைக்கு பயன்படுத்தப் பட்டன. இரண்டும் இன்றி ரசிகர்களை சோதித்த பேய்களும் உண்டு. ஆனால் இதுவரை வந்த எந்தப் படத்திலும் இல்லாத வகையில் பேயைப் பார்த்து பயப்படக்கூடாது என்பதுடன் பேயுடன் நட்பு பாராட்டினால் அது நமக்கு கட்டுப்படும் என்று பேய் இருக்க பயமேன் சொல்லியிருக்கிறரார்கள்.

புதுமணத் தம்பதி தனிக் குடித்தனம் நடத்த ஒரு பங்களாவுக்கு வருகிறார்கள். அந்த வீட்டில் ஜோடியாக இரண்டு பேய்கள் இருக்கின்றன. மனதளவில் ஒத்துப்போகாமல் இருக்கும் ரியல் ஜோடியை பேய் ஜோடி இணைத்து வைக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன்தான் படத்தின் கதை திரைக்கதை வசனத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பை முதல் பாதியில் கொண்டுவர ஏன் தவறி விட்டார் என்று தெரியவில்லை. இந்த ஒரு விஷயத்தில் இயக்குநராக சற்றே சறுக்கினாலும், நடிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேறுகிறார்.

நாயகியாக வரும் காயத்ரி ரமா கவனம் ஈர்க்கிறார். ஆராய்ச்சியாளராக வரும்முத்துக்காளை சாமியாராக நடித்திருக்கும் நெல்லை சிவா போன்ற ஓரிவரைத் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்கள் என்றாலும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

ஜோஸ் பிராங்கிளின் இசையில் உருவான பாடல் சிறப்பு. பின்னணி இசையையும் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கதை முழுக்க ஒரு வீட்டுக்குள் நடப்பது போல் அமைந்து விட்டாலும், அந்த எண்ணமே வராத அளவுக்கு அபிமன்யுவின் ஒளிப்பதிவு அமைந்திருப்பதற்கு தனியாக பாராட்லாம்.

முதல் பாதியில் கவனம் செலுத்தி விறுவிறுப்பை கூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். இரண்டாம் பகுதியில் வரும் மாறுபட்ட காட்சியமேப்புகளுக்காகவே தராளமாக பேய் இருக்க பயமேன் படத்தை பார்க்கலாம்.

 

Share.

Comments are closed.