பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல புரிதலை உண்டாகும் ‘பிழை’!
Turning point நிறுவனம் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜனவரி 3ம் தேதி வெளிவரவுள்ள இருக்கும் திரைப்படம் பிழை படத்தின் தயாரிப்பாளர், நடிகரும், பாடலாசிரிய ருமான திரு. ரா.தாமோதரன் கூறுகையில்... இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் இல்லாததே பிழை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு தந்தை தன் பிள்ளைகளை தோளுக்கு மேல் தூக்கி கடவுளை காண செய்கின்றார். கடவுளை கை கூப்பி வணங்கி அப்பா சாமிய நல்லா பாதேன்னு சொல்ற அந்த பிள்ளைகளுக்கு நாம் இருப்பதே சாமி மேல தான்னு அப்போ தெரியாது. நாம் அதை உணரும்போது அவர்கள் நம்மோடு இல்லாமல் தெய்வமாகி போகின்றனர். நம் பெற்றோர்கள் நம்மை படிக்க சொல்லியும், ஒழுக்கமாக இருக்க சொல்லி கண்டிப்புடன் வளர்ப்பது நம் நன்மைக்கு என்பது புரியாமல் இன்று மாணவ சமுதாயம் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறது. சிறு வயதிலேயே தங்கள் இஷ்டம்போ...
