Friday, October 23

Tag: pl.theappan

பேரன்பு படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு

பேரன்பு படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு

News
பனாஜி. நவம்பா் 27 கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழா இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இந்தியன் பனோரமா பிரிவில் வங்க மற்றும் மலையாள மொழிப்படங்கள் ஐந்து அல்லது ஆறு இடம் பெற்று விடும். காரணம் இந்த மொழிகளில்தான் தரமான படங்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. தரமற்ற படங்கள் அதிக எண்ணிக்கையில் வரும் தமிழில் ஒரிரு படங்கள் இடம் பெற்றாலே பெரிய விஷயம். ராம் இயக்கிய பேரன்பு, ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் இந்த ஆண்டு இடம் பெற்றது பெருமைக்குரிய செய்தி மட்டுமின்றி பெருமகிழ்ச்சிக்குரியதுமாகும். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராமின் நான்காவது படைப்பு பேரன்பு. தமிழ்ப்படவுலகின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் மூன்று தேசிய ...