Friday, October 23

Tag: Police family

மார்ச் 13 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும்  ‘பூக்கி’

மார்ச் 13 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும் ‘பூக்கி’

News
ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!* ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது ! இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டு...
மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

News
பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’! சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ பட...