ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘போலீஸ் போலீஸ்’!
ஜியோஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘போலீஸ் போலீஸ்’ எனும் தொடர் – முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது!
சென்னை, ஜூலை 30, 2025 — ஹார்ட்பீட், ஆஃபிஸ், உப்பு புளி காரம் போன்ற மெகா ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது — போலீஸ் போலீஸ். இது ஒரு அதிரடியான போலீஸ் டிராமா ஆகும், விரைவில் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
RJ செந்தில் (சரவணன் மீனாட்சி புகழ்) மற்றும் அறிமுக நடிகர் ஜெயசீலன் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த தொடரில், ஷபானா ஷாஜஹான் (குக் வித் கோமாளி), சுஜிதா தனுஷ் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), சத்யா (பிக் பாஸ்), வின்சென்ட் ராய், மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.“முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும்” எனும் கவர்ச்சிகரமான டேக்லைனுடன், செந்தில் மற்றும் ஜெயசீலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட...
