Friday, May 1

Tag: Pradeep Ranganathan

‘டியூட்’ படத்தில் சொந்தக் குரலில் பாடி இருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்

‘டியூட்’ படத்தில் சொந்தக் குரலில் பாடி இருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்

News
‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப். சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்...
தீபாவளிக்கு திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’

News
திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார். 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் 'டியூட்' வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி ம...
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிக்கும் இரு மொழிப் படம்!

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிக்கும் இரு மொழிப் படம்!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது! 'லவ் டுடே' படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கடுத்து அவர் நடித்த 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிடயடைந்தது. அடுத்தடுத்து வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளிய...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜு நடிக்கும் படம்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜு நடிக்கும் படம்!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம் பிரம்மாண்டமாக தொடங்கியது! பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த 'லவ் டுடே' படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான 'டிராகன்' படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு பல பெரிய படங்களில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் என்...
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!

News
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்! சினிமா கனவுகளோடு திரிந்த மிக எளிய இளைஞனான பிரதீப் ரங்கநாதன், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநராக, நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞனாக சினிமா கனவுகளோடு வாழ்வைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு, இயல்பிலேயே கதை சொல்லும் திறமை பளிச்சிட்டது. தான் பார்க்கும் இன்றைய இளைய சமூகத்தின் இயல்பை, கதையாக்கி அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படம் திரைத்துறையில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த குறும்படம் மூலம் அவருக்கு கோமாளி பட வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிப்பில் அவர் இயக்கிய “கோமாளி” திரைப்படம் பெரு வெற்றி பெற...
மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்!

மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்!

News
'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்* *கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். ▶️ https://www.youtube.com/watch?v=FPYbCVcPxW8 *திரைப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடம் அதிரடி வரவேற்பை பெற்றுள்ளது* தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நா...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும்“எல் ஐ சி ( LIC )”

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும்“எல் ஐ சி ( LIC )”

News
*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !!* *விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன்  இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !!* புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கந...