டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’
டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது!
’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது...

