“பார்வையாளர்களின் ரசனையை திருப்திப்படுத்தும் ‘பத்து தல’” – ப்ரியா பவானி சங்கர்!
சரியான கதாப்பாத்திரங்களின் தேர்வு மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுக்க நிபந்தனையற்ற முயற்சிகள் என இவை அனைத்தும் நடிகை ப்ரியா பவானி சங்கரை தென்னிந்தியத் திரையுலகில் அதிக டிமாண்ட் கொண்ட நடிகையாக மாற்றியுள்ளது. மார்ச் 30, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராகி வரும் ‘பத்து தல’ படத்திற்காக இண்டஸ்ட்ரியில் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவுடன் வேலை பார்த்த அனுபவம் குறித்து உற்சாகமாக பேசி இருக்கிறார் ப்ரியா.
இது குறித்து நடிகை ப்ரியா பவானி சங்கர் கூறும்போது, “ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம். இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார். அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தி...









