எஸ்.ஜே.சூர்யா ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘மான்ஸ்டர்’
கதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.
இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால்...

