Sunday, September 27

Tag: Priyanka Mohan

‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

News
ராஷ்டிரபதி பவனில் 'மேட் இன் கொரியா' திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்த நெட்ஃபிலிக்ஸின் 'மேட் இன் கொரியா' திரைப்படம் உலகளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டதன் மூலம் இந்தப் படம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது....
‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

News
நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்கு...
மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்!

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்!

News
பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது ! கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமா...
“சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில் பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக்!

“சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில் பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக்!

News
நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது ! நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக்கை இன்று, தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியங்கா மோகனின் சாருலதா கதாப்பாத்திரம், அப்பாவி போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறது. அந்த கதாப்பாத்தி...