Friday, October 23

Tag: producer cvkumar

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் சீர் மிகு சிறப்புத் திட்டம்!

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் சீர் மிகு சிறப்புத் திட்டம்!

News
டிஸ்னி ஹாட்ஸ்டார் , அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ‘ஓவர் தி டாப்’ என வருணிக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையிடல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. மில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் இந்த வெளிநாட்டுத் தளங்களை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான். ஏனென்றால் வயிறு காய்ந்திருந்தாலும் தங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் சோறிட அவர்கள் மறப்பதில்லை. அதனால் தான் சினிமா தொழில் தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் பொழுதுபோக்குச் சந்தையாக இருந்து வருகிறது. திரையரங்குகள் முற்றாக முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இன்னும் தங்கள் பிடியை இறுக்குகின்றன. இந்த கரோனா ஊரடங்கில் இணையத் திரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து தமிழ்த் திரையைச் சேர்ந்த ஒருவர் கூட ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்க முன்வரவில்லையே என்ற ஆ...