Friday, October 23

Tag: PT sir review

பி.டி. சார் _ விமர்சனம்

பி.டி. சார் _ விமர்சனம்

Reviews
பி.டி. சார் _ விமர்சனம் பள்ளி, கல்லூரி என பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார் தியாகராஜன். அவரது பள்ளி ஒன்றில் பிடி ஆசிரியராக பணியாற்றி வரும் ஹிப் ஹாப் ஆதியை அவரது தாயார் சிறு வயதிலிருந்தே பொத்திப் போர்த்தி வளர்த்து வருகிறார். காரணம் எந்த ஒரு சின்ன சண்டை சச்சரவில் ஆதி சிக்கினாலும், அவரது வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று ஒரு ஜோதிடர் சொல்லி இருப்பது தான். ஆதியின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளம்பெண் அனிகா சுரேந்திரன் காணாமல் போகவே, அவரை தேடிச் செல்கிறார் ஆதி. காணாமல் போன அனிகா சுரேந்திரன் கிடைத்துவிட்டாலும் தொடர்ந்து நடந்த பல சம்பவங்கள் நிலைமையை சிக்கலாகுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் அனிகா சுரேந்திரன். தியாகராஜன் நடத்தும் கல்லூரி ஒன்றில் பயின்று வருபவர்தான் அனிகா சுரேந்திரன். தற்கொலை செய்து கொண்ட அனிகா கடிதம் ஒன...