Monday, August 31

Tag: PUSHPA 2

ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்த ‘புஷ்பா2’!

ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்த ‘புஷ்பா2’!

News
நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது! ’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரித்தி...
ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

News
ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைல...
புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நடனமாடும்நடிகை ஸ்ரீலீலா!

புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நடனமாடும்நடிகை ஸ்ரீலீலா!

News
நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்! மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ரீலீலா சிறப்புப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது. இந்த செய்தியை படக்குழு அற்புதமான போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது. 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் இடம்பெற்ற 'ஊ அண்டாவா' பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ள...
இந்தி வியாபாரத்தில் சாதனை புரிந்த ‘புஷ்பா 2’!

இந்தி வியாபாரத்தில் சாதனை புரிந்த ‘புஷ்பா 2’!

News
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் டிசம்பர் 6, 2024 அன்று வெளியாவதை இந்திய திரையுலகமும் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் பற்றிய சின்ன சின்ன அப்டேட் கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா, 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரம் ரூ. 250 கோடிக்கு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். இதில் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமம் ஆகியவையும் அடங்கும். சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் ‘கேஜிஎஃப்2’ திரைப்படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும் என ...
‘புஷ்பா 2’ வெளியீட்டுத் தேதி டிசம்பர் 6

‘புஷ்பா 2’ வெளியீட்டுத் தேதி டிசம்பர் 6

News
'புஷ்பா 2: தி ரூல்' டிசம்பர் 6, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2: தி ரூல்' படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணத்தையும் படக்குழு சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'புஷ்பா2' தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல...
‘புஷ்பா 2-தி ரூல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘புஷ்பா 2-தி ரூல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

News
'புஷ்பா2 – தி ரூல்' ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2-தி ரூல்' படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ தேதியுடன் வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் விடுமுறை நாட்களின் நீட்டிக்கப்பட்ட வாரயிறுதியுடன் கூடிய இந்த வெளியீட்டுத் தேதி, பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அதிகரிக்க சரியான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 'புஷ்பா-தி ரைஸ்' படத்தின் வெற்றிக்குப் பின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதிக்காக நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் சமீபத்தில் 69வது தேசிய விருதுகளில் புஷ்பாவ...