Wednesday, October 28

Tag: raid review

ரெய்டு விமர்சனம்

Reviews
ரெய்டு விமர்சனம் எத்தனையோ படங்களில் பார்த்து சலித்துப்போன போலீஸ் அதிகாரியின் கதைதான் ரெய்டு. கதையை நேர்கோட்டில் சொல்லாமல் காட்சிகளை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டு கதையைச் சொல்லும் யுக்திக்கு நான் லீனியர் என்று பெயர். ரெய்டு படத்தில் அந்த நான் லீனியர் முறையை முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி. படத்துக்கு பலமாக அமைய வேண்டிய இந்த யுக்தியே பலவீனமாக அமைந்து பார்வையாளர்களை பதம் பார்க்கிறது. கதைதான் அரதப்பழயது என்றால் காட்சிகளிலாவது கொஞ்சம் புதுமையாக எதையாவது முயற்சி செய்திருக்கக்கூடாதா? பெண்களை காதலிப்பதுபோல் நடித்து அவர்களுடன் உறவு கொண்டு அதை படமாக எடுத்து வைத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்கிறது ஒரு கும்பல். சர்வசாதரணமாக சில பல கொலைகளையும் செய்கிறது இந்தக் கூட்டம். இவர்களின் கொட்டத்தை அடக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு களமிறங்குகிறார். பிறகென்ன....