Friday, October 23

Tag: Rail review

ரயில் _ விமர்சனம்

ரயில் _ விமர்சனம்

Reviews
ரயில் _ விமர்சனம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ்,வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ்வைத்யா , செந்தில் கோச்சடை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ரயில். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி இசையமைத்து உள்ளார். சிறு கிராமத்தில் மனைவியுடன் வசிக்கிறான் நாயகன். குழந்தை இல்லை. நாயகனுக்கு எலக்ட்ரீசியன் தொழில். ஆனால், தொழிலைவிட குடிப்பதையே முக்கியமாக கருதி நண்பனுடன் விட்டேத்தியாக திரிகிறான். இவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிறான், வடக்கில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் இளைஞன். அவனுடன் தன் மனைவி பேசுவது, நாயகனுக்கு பிடிக்கவில்லை. தவிர வட இந்தியர்களால்தான் தன்னைப் போன்ற மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என நினைக்கிறான். ஒரு கட்டத்தில் வட இந்திய இளைஞனை கொலை செய்ய திட்டமிடுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. ...