 
            அமெரிக்காவில் ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு எப்படி?
             
 
அன்று சென்னையில்கல்லூரி மாணவனாக நான் இருந்த காலத்தில் 16 வயதினிலே படத்தில் பரட்டை ஆக நடித்த ரஜினி"இது எப்படி இருக்கு"என்று கேட்பார். 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா வந்த நான் கூலி படத்தை பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று  சொல்ல விரும்புகிறேன். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொன்னது போல "வயசு ஆனாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை அப்படியே தான் இருக்கு"என்ற வசனத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அன்று பார்த்த அதே நடிப்பின் விறுவிறுப்பு , குறிப்பாக சண்டையின் இடையில் வில்லனை பார்த்து" breathe in" "breathe out" என்று சொன்னபோது தியேட்டரே சிரிப்பிலும் கைத்தட்டலும் அதிர்ந்தது. அதுபோன்ற சின்ன சின்ன நகைச்சுவை அதே நேரத்தில் சண்டை காட்சியில் காட்டும் வேகம் ஆகியவை மற்ற எல்லா விஷயங்களை பின்னுக்கு தள்ளி ரஜினியின் முகம் மட்டுமே நமக்கு படம் ஆரம்பித்து கடைசி வரை நிற்கிறத...        
        
    








