நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
கன்னட நடிகர், இயக்குநர் ரக்ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது 'பேச்சிலர் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்ற...
