ராம்சரண் – உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு!
ராம்சரண் - உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு!
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
''எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்'' என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார்.
குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர்.
ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்சரண் பேசுகையில், '' உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்களுடைய குழந்தை கடந்த இருபதாம் தேதியன்று பிறந்தார். தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள்.
டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹ...


