ரணம் _ விமர்சனம்
ரணம் _ விமர்சனம்
மற்றும் ஒரு புலனாய்வு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் 'ரணம்'. ஆயினும் பார்த்து சலித்த புளித்துப்போன கதையாக இல்லாமல் சற்று மாறுபட்ட படமாக்க அமைந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.
இறந்து போனவர்களின் சிதைந்து போன உடலை வைத்து, இறந்தவர் முகத்தை துல்லியமாக வரைந்து சொல்லும் திறமை படைத்தவர் வைபவ். அந்தப் படத்தை வைத்து காவல் துறையினர் புலனாய்வு செய்து பல வழக்குகளில் துப்பு துலக்குகின்றனர்.
ஒரு விபத்தில் வைபவ் தன மனைவியை பறிகொடுக்கிறார். அதோடு இவருக்கும் 2 வருட நினைவுகள் அழிந்து போகின்றன.
இதற்கிடையே, வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இந்த நிலையில் வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப்.கிடைத்த உடல் பாகங்கள் அனைத்தும் வேறு வேறு உடல்களில் இருந்து எ...
