புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய இயக்குநர் பா.இரஞ்சித்!
தமிழ்த்திரை உலகைப் பொறுத்தவரையில் இயக்குநர் பா.இரஞ்சித் முற்றிலும் மாறுபட்டவர். பொழுதுபோக்கிற்காக சினிமா என்பதைத் தாண்டி, மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணிப்பவர். சமூக அடுக்குகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.
"நீலம் பண்பாட்டு மையம்", " தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்", "கூகை திரைப்பட இயக்கம்" என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு அவர் உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாளான ஜனவரி முதல் நாளில், ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு "நீலம் பண்பாட்டு மையம்" ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள "அம்பேத்கர் அரசியல் பள்ளி", "சட்ட ஆலோசனை மையம்", "விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள்", "அம்பேத்கர் நூலகங்கள்", "வேலைவாய்ப்பு ...
