திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)
சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய 'மிக மிக அவசரம்' படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெறும் 17 திரையரங்குகளே தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப்போனது. திரைப்படம் தயாரிப்பதைவிட, அதைத் திரையரங்கில் வெளியிடுவதற்கு அதிக செலவாகும் என்ற அநியாய அராஜகத்தில் தமிழ்ப் படவுலகம் சிக்கிக்கொண்டிருப்பதால்தான், பல படங்கள் இன்று வெளியாகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன.
'மிக மிக அவசரம்' படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 85 லட்சம் ரூபாய்வரை புரொமேஷனுக்கு செலவிட்ட நிலையில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. சித்தார்த் நடித்த 'அருவம்', தமன்னா நடித்த 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்கள் 11ஆம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பின் பேரில், ஏற்கெனவே 'மிக மிக அவசரம்' படத்தை திரையிட ஒப்புக்கொண்டிருந்த திரையரங்குகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொ...
