ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்
ரிப்பப்பரி - திரைப்பட விமர்சனம்
மாஸ்டர் மகேந்திரனும் அவரது நண்பர்கள் இருவரும் யூட்யூபில் சமையல் நிகழ்ச்சி நடத்துகிறோம் என்ற பெயரில் ஊருக்குள் ஏகப்பட்ட அலப்பறைகள் செய்கிறார்கள்.
யூட்யூப் நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகை தங்க மீன் என்ற புனைப் பெயரில் மாஸ்டர் மகேந்திரனை பாராட்டி வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்புகிறார். மகேந்திரனும் காணாத அந்தக் காதலியை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
மகேந்திரனின் நண்பர் ஒருவர் காதல் திருமணம் செய்துகொண்டு மகேந்திரனைக் காண வரும்போது, ஒரு பேயால் கொலை செய்யப்படுகிறார்.
இதுவரை நகைச்சுவையாக சென்று கொண்டிருந்த கதை இப்போது பேய் பிசாசு என கொஞசம் ட்ராக் மாறியும் நகைச்சுவை தண்டவாளத்திலேயே பயணிக்கிறது.
மகேந்திரனின் நண்பனைக் கொன்ற பேய் ஜாதி வெறி பிடித்த பேய் என்றும் (?) அது ஜாதி மாறி திருமணம் செய்துகொள்பர்களைக் கொன்று விடும் (!) என்ற மகேந்திரனுக்கு தெரிய வருகிற...
