Wednesday, September 2

Tag: Robo Shankar

கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ” அம்பி “!

கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ” அம்பி “!

News
T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F. பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு " அம்பி " என்று பெயரிட்டுள்ளனர். மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இ...
‘ரோபோ’ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ”பொங்குறோம் திங்கிறோம்”!

‘ரோபோ’ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ”பொங்குறோம் திங்கிறோம்”!

News
குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன. அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி "பொங்குறோம் திங்கிறோம்" . முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இந்த சமையல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது, மலேசியாவில் மலேசிய உணவுகளைப்பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள். இந்த 'பொங்குறோம் திங்கிறோம்' நிகழ்ச்சிக்கு கிரேஷ்கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சி...

“பிளான் பண்ணி பண்ணனும்”  படத்திற்காக ரம்யா நம்பீசன் பாடிய பாடல்! 

News
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும்,  காமெடி சரவெடிக்கு உறுதிகூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக  நடந்து வருகின்றன. இந்த நிலையில் இப்படத்திற்காக ஒரு ஃபோக் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் “பியார் பிரேமா காதல்” படத்தில் இணைந்து High on love பாடலை எழுதிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இப்பாடலையும்  எழுதியுள்...
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்  வெளியாகும்  ‘தி லயன் கிங்’

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் ‘தி லயன் கிங்’

News
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த்,ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். 1994 அனிமேஷன் வெர்சனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது ஒரு குடும்ப உணர்வுகளை பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சியை எ...
குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்!

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்!

News
  குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.   கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவு...
போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடகராகிறார் ரோபோ ஷங்கர்

போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடகராகிறார் ரோபோ ஷங்கர்

News
எந்த ஒரு பெரிய இடத்துக்கு போனாலும் நாம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பதும், அதற்கு மரியாதை செய்வதும் மிகச்சிறந்த ஒரு செயல். நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து இயக்குனராக அறிமுகமாகும் காதல் படத்தில் அதேபோல ஒரு செயலை செய்துள்ளார். அதில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.   இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது, "நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன், அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்ட...